இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 21, 2020 11:34 AM

1, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

important News Headlines Read in One minute, Jan 21st

2, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 17 காசு குறைந்து ரூ.77.72க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 23 காசு குறைந்து ரூ.71.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

3, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1-ம் தேதிக்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல் தெரிவித்துள்ளார். 

4, 1971-ல் நடந்த சம்பவம் குறித்து ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை ரஜினிகாந்த் காட்டியது ஏன் என்று திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார். 

5, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச பிரசாதமாக ஒரு லட்டு வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.

6,   தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவை ஆகம விதிப்படி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து அறநிலையத்துறை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : #TODAY #NEWS #HEADLINES