இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 20, 2020 12:14 PM

1, 4000 ரன்களை அதிவேகமாக கடந்த 5வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஸ்டீவ் ஸ்மித். 

important news headlines today read in one minute jan 20th

2, வாட்ஸப் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டதாகவும், இனி வாட்ஸப்பில் புகைப்படங்களை, வீடியோக்களை தங்கு தடையின்றி அனுப்பலாம் புதிய அப்டேடுக்காக வாட்ஸ் ஆப் ஷட் டவுன் ஆகிற அளவுக்கான கோளாறு ஏற்பட்டதாகவும், ஆனால் சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

3, குடியுரிமை சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நிர்மலா சீதாராமன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.  மேலும் 1995-ம் ஆண்டு முதல் குடியுரிமை சட்டம் இருந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

4, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். ரோஹித் சர்மா தனது 217-வது இன்னிங்ஸில் ஒரு நாள் போட்டிகளில் 9000 ரன்களை எட்டினார்.

5, ஆரோக்கியா, ஹெரிடேஜ், டோட்லா  நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும்,  அர்ஜூனா நிறுவனம் லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளன. சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் 48ல் இருந்து 50 ரூபாயாகவும்,  நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் 52ல் இருந்து 56 ரூபாயாகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 60ல் இருந்து 62 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Tags : #NEWS #TODAY #HEADILINES