இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 24, 2020 12:58 PM

1, பெரியார் குறித்து அவதூறாஜ பேசியதாக ரஜினி மீது, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.இதனை அடுத்து அந்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Important News Headlines in Tamil, Read in One minute Jan 24th

2, தங்கம் சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.30,552-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

3, சேலத்தில் ராமர், சீதை படங்களுடன் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

4, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

5, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் இருந்த பெரியார் சிலையின் கை மற்றும் முகம் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளன. சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags : #HEADLINES #NEWS