“அரசு அலுவலக பிரிண்டரில் இருந்து வந்த சத்தம்”... “திறந்து பார்த்ததும் அலறிய அதிகாரிகள்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 24, 2020 05:45 PM

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தில் செயல்பட்டு வரும் துணைமின் நிலைய அலுவலகத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் அலுவலகம் உள்ளது.

Snake enters into tangedco office printer in thiruvallur

இங்குதான் உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா், துணை மின் நிலையம், மின் வாரியத்தின் மின் உபகரணங்கள் சேமிப்புக் கிடங்குகள் இருக்கின்றன. இந்த அலுவலகத்தை சுற்றிலும் அடர்ந்த செடி கொடிகள் இருப்பதால், அங்கிருந்து பாம்புகள் உள்ளிட்ட விஷமமான உயிரிகள் அலுவலகத்துக்குள் நுழைகின்றன.

இந்த நிலையில்தான் உதவி பொறியாளா் அலவலகத்தில் உள்ள பிரிண்டர் ஒன்றில் இருந்து உஷ்ஷ்.. உஷ்ஷ் என்று சத்தம் வரத் தொடங்கியது. இதைக் கவனித்த ஊழியர்கள் பிரிண்டருக்குள் பாம்பு இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் பாம்பை வெளியேற்ற படாத பாடு பட்டனர். நீண்ட நேரம் டிமிக்கி கொடுத்த பாம்பு கடைசியாக பிரிண்டரில் இருந்து வெளியேறியதை அடுத்து ஊழியர்கள் பாம்பினை அடித்தே கொன்றுவிட்டனர். இந்த அலுவகலத்தில் தொடர்ந்து நடக்கும் இப்படியான சம்பவங்கள் அதிகாரிகளை பதற வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #SNAKE #PRINTER #OFFICE