‘தொப்புள்கொடி கூட எடுக்காமல்’... ‘பிறந்து சில மணிநேரத்திலேயே’... ‘கால்வாயில் குழந்தையை வீசிசென்ற கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 22, 2019 02:13 PM

வேலூர் அருகே தொப்புள்கொடி கூட எடுக்கப்படாத நிலையில், பெண் சிசு ஒன்று கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

without taking the umbilical cord, baby girl thrown in sewer

ஆற்காடு அருகே மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்டது தஞ்சாவூரான் காலனி. இந்த காலனி அருகே உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூரான் காலணி குடியிருப்புவாசிகள், காலை மற்றும் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்று வழக்கம்போல் அப்பகுதியினர் நடைப்பயிற்சியில் ஈட்டுப்பட்டிருந்தனர்.

அப்போது இந்தப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில், அழுகிய நிலையில் மிதந்த குழந்தையின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்துனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டபோது, அந்த குழந்தை பெண் குழந்தை என்பதும், அது பிறந்தவுடன் கால்வாயில் தூக்கி வீசப்பட்டதும் தெரியவந்தது. அந்த குழந்தையின் தொப்புள்கொடி அறுக்கப்படாமல், அழுகிய நிலையில் கிடந்தது.

இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசி சென்றது யார் என்பது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தையின் உடல் அழுகிய நிலையிலிருப்பதால், குழந்தை வீசப்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tags : #CORD #UMBILICAL #GIRL #BABY