“டிவியில க்ரைம் ஷோ பாத்தேன்... ஐடியா கெடைச்சுது!”.. “குடிகார மகன் தாய்க்கு செய்த கொடூரம்!”

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 09, 2020 01:05 PM

மும்பை குர்லா பகுதியில் வசித்து வந்தவர் 30 வயதான சுஹாயில் ஷாயிக். இவர் தினமும் குடித்துவிட்டு வந்ததை இவரது தாய் கண்டித்துள்ளார்.

alcohalic gets ideas from Crime show after killing his mom

வேலைக்குச் செல்லாமல் இருக்கும் சுஹாயில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை தாய் கண்டித்ததால், தாய் மீது ஆத்திரம் கொண்டுள்ளார். அப்படிதான் போதையில், தன்னை திட்டிக் கொண்டிருந்த தாயிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். வாக்குவாதம் முற்றிப் போக, தாயை அடித்தே கொன்றுள்ளார்.

அடுத்த நாள் விடிந்த பிறகே போதை தெளிந்துள்ளது. அப்போதுதான், அவருக்கு தான் செய்தது என்ன என்று நினைவுக்கு வந்துள்ளது. உடனே டிவியில் பார்த்த ஒரு க்ரைம் ஷோ அவருக்கு நினைவுக்கு வரவே, அதில் வந்தது போலவே தாயை துண்டு துண்டுகளாக வெட்டி மும்பையின் வெவ்வேறு இடங்களில் போட்டிருக்கிறார்.

பின்னர் வித்யாவிஹார் பகுதியில் துண்டுத் துண்டுகளாக கிடந்த சடலக் கூறுகளை வைத்தும், சுஹாயிலின் ஸ்கூட்டர் ஆங்காங்கே சென்று வந்துள்ளதன் சிசிடிவி காட்சிகளை வைத்தும் போலீஸார் செய்த விசாரணையில் சுஹாயில் ஷாயிக் சிக்கிக் கொண்டார். அதன் பின் நடந்ததை பற்றிய வாக்குமூலத்தை கூறியுள்ளார். இறுதியில் பிரிவு 302-ன் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : #MUMBAI #ALCOHALIC #DON #MOTHER