‘இத்தன நாளா தெரியாம போச்சே’.. 3 வருஷமா பூமியை சுற்றிவரும் ‘குட்டி நிலா’.. கண்டுபிடித்து அசத்திய ஆய்வாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Feb 27, 2020 03:58 PM

மூன்று வருடங்களாக பூமியை சுற்றி வரும் புதிய குட்டி நிலா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Earth has a new mini moon, scientists announced

பூமியை சுற்றி வரும் புதிய நிலா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மைனர் பிளானட் சென்டர் (Minor Planet Centre) அறிவித்துள்ளது. மூன்று வருடங்களாக சுற்றுவரும் இந்த நிலா தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு `2020 CD' என பெயரிடப்பட்டுள்ளது. இது அவ்வப்போது நிகழும் நிகழ்வுதான் என MPC தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 2006ம் ஆண்டு இதுபோன்ற விண்கல் பூமியை சுற்றி வந்தது. அதன்பின்னர் அதன் சுற்றுவட்டப்பாதையில் அது சென்றுவிட்டது. தற்போது `2020 CD' பூமியை சுற்றி வருகிறது. இதன் செயல்பாட்டை கண்காணிப்பது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றின் ஆதிக்கம் இந்த பொருட்களின் மீது இருப்பதால் இவற்றின் பாதை எந்நேரமும் மாறுபடும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த குட்டி நிலவு பூமியை மோதுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது அளவில் சிறியதாக இருப்பதால் தரையை அடையும்முன் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி மோதாத பட்சத்தில் பூமியை சில சுற்றுகள் சுற்றிவிட்டு சூரியனை நோக்கி சென்றுவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட காலத்திற்கு இந்த நிலவு நம்முடன் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #NEWMOON