"நம்ம நாட்டுக்கு எப்பதான் போவோம்?".. காத்திருந்த 'வெளிநாட்டு வாழ் இந்தியர் அட்டைதாரர்களின்' நெஞ்சை குளிரவைத்த இந்தியா!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்ப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வேலை இழந்த இந்தியர்கள் பலரும் தங்கள் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து அவர்களை மீட்பதற்காக ‘வந்தே பாரத்’ திட்டம் உருவாக்கப்பட்டு விமானங்களை அனுப்பி மத்திய அரசு மீட்டு வருகிறது.
முன்னதாக வெளிநாடுவாழ் இந்தியர் அட்டை உள்ளிட்ட அனைத்து விசாதாரர்களும் இந்தியாவுக்குள் நுழைவதற்கான தடையை கடந்த மார்ச் 25ம் தேதியிலிருந்து மத்திய அரசு விதித்திருந்தது. இந்த நிலையில் இந்த விதிகளில் சில தளர்வுகளை அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிறந்து வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை வைத்திருக்கும் அனைத்து சிறு குழந்தைகளும் இந்தியா வரலாம் என்றும், குடும்ப உறுப்பினர் மரணம் போன்ற அவசர காரணங்களுக்காக இந்தியர் அட்டை வைத்திருப்போர் இந்தியா வரலாம் என்றும், கணவன் மனைவி இருவரில் ஒருவர் இந்தியராகவும் மற்றவர் வெளிநாடுவாழ் இந்தியர் அட்டைதாரராகவும் இருக்கும் நிலையில் அவர்களுக்கு நிரந்தர வசிப்பிடம் இந்தியாவில் இருந்தால் அவர்கள் இந்தியா வரலாம் என்றும், பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைதாரராக இருந்து இந்தியாவில் அவர்களது பெற்றோர் இந்திய குடிமக்களாக வசித்து வந்தால், அம்மாணவர்களும் இந்தியா வரலாம் என்றும் அந்த அறிக்கையில் முக்கிய அம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.