‘உலகிலேயே இந்தியாவில் தான் இது குறைவு’... 'மத்திய அமைச்சர் தந்த தகவல்’
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் விகிதம், இந்தியாவில்தான் மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஜம்மு காஷ்மீ்ர் யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அவர் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 3 புள்ளி 2 சதவீதமாக இருப்பதாக தெரிவித்தார். இதைவிட பல்வேறு மாநிலங்களில் குறைவாக இருப்பதாகவும், ஆனால், உலக அளவில் 7 முதல் 7.5 சதவீதம் பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேபோல, குணமடைவோர் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக அவர் தெரிவித்தார். அதன்படி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 31.7 சதவீதம் பேர் குணமடைவதாகவும், இந்தியாவில் தினமும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஹர்ஷவர்த்தன் கூறினார்.
