தண்ணிப் புடிக்க போன இடத்துல 'பிரச்சனை'... 'இத' வேணா குடிச்சிட்டு போ... அவமானப்பட்ட இளைஞரின் 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 15, 2020 12:57 AM

மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த வாலிபர் விகாஸ் ஷர்மா. கோவிலுக்கு தண்ணீர் பிடிக்க வேண்டி அப்பகுதியிலுள்ள தெருவில் கைப்பம்பு இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

Man forced to drink urine commits suicide in MadhyaPradesh

கைப்பம்பில் குடத்தை வைத்து விகாஷ் ஷர்மா தண்ணீர் பிடித்த போது, அருகிலுள்ள குடத்தில் தண்ணீர் பட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மனோஜ் என்பவர் அவரது சகோதரிகள் இரண்டு பேருடன் இணைந்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் விகாஷின் குடத்தில் சிறுநீரைக் கழித்து, அதனைக் குடிக்குமாறு மூன்று பேரும் சேர்ந்து அந்த வாலிபரை வற்புறுத்தவும் செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த விகாஷ் ஷர்மா வீட்டிற்கு சென்றதும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக தான் தற்கொலை செய்ததற்கான காரணத்தையும் கடிதம் ஒன்றில் எழுதி வைத்துள்ளார். கடிதத்தை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய போலீசார், மனோஜ் உட்பட அவரது இரண்டு சகோதரிகளையும் முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல், தற்கொலைக்கு உடந்தை ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.