'40 ஆண்டுகளில்' முதல்முறை... இந்தியாவில் 'ஊரடங்கால்' சாத்தியமான 'மாற்றம்'... ஆய்வில் வெளிவந்துள்ள 'மகிழ்ச்சி' செய்தி!...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 13, 2020 12:21 PM

இந்தியாவில் ஊரடங்கால் நச்சு கார்பன்டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Corona Lockdown India CO2 Emission Fall First In 40 Years

உலகில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றும் நாடுகளில் 4வது இடத்தில் இந்தியா உள்ள நிலையில், தற்போது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் நச்சு கார்பன்டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் நாட்டில் தொழிற்சாலைகள் இயங்காததும், வாகன போக்குவரத்து குறைந்ததுமே இதற்கு காரணமெனக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று பற்றிய ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த லவுரி மைலிவிர்தா மற்றும் சுனில் தஹியா ஆகியோர், "இந்தியாவில் மார்ச் மாதம் நச்சு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 15 சதவீதம் குறைந்துள்ளது. இது ஏப்ரல் மாதம் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான சமீபத்திய நுகர்வு தரவுகளை முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 2019-20 நிதியாண்டில் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வு 30 மில்லியன் டன் குறைந்துள்ளது.

அரசாங்க தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட பகுப்பாய்வில், நிலக்கரி எரியும் ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மார்ச் மாதத்தில் 15 சதவீதமாகவும், ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் 31 சதவீதமாகவும் ஆகவும் சரிந்ததுள்ளது தெரியவந்துள்ளது. அதற்கு மாறாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  உற்பத்தி மார்ச் மாதத்தில் 6.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் 1.4 சதவீதம் சிறிதளவு குறைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.