'கொரோனாவுக்கு இடையே'... 'பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து சைலண்ட்டாக பார்க்கும் காரியம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 15, 2020 02:10 PM

உலகமே கொரோனா விஷயத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா ஆதரவுடன் பாகிஸ்தான் அணை கட்ட உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chinese signs deal with pakistan to build dam against india

கொரோனாவை பரப்பியதுடன், அதற்கான தரமற்ற மருத்துவ உபகரணங்களை விற்று சீனா லாபம் பார்ப்பதாக பல நாடுகளும் குற்றஞ்சாட்டி வந்தன. ஆனால் இதனைப் பற்றி கவலைப்படாமல், சீனா அண்டை நாடுகளில் ஆக்கிரமிப்பு விஷயங்களையும் செய்து வருகிறது. சொல்லப்போனால், கடந்த இரண்டு நாட்களில், சீன துருப்புக்கள், சிக்கிமில் எல்லையில் இந்திய வீரர்களுடன் மோதல்களில் ஈடுபட்டன. சீன ஹெலிகாப்டர்கள் லடாக்கில் இந்தியாவுடன் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஐசி) அருகில் பறந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்திய பிரதேசத்தில் சீனா ஒரு அணை கட்டி வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்துடன் ஒரு சீன நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கில்கிட்-பால்டிஸ்தானில் தொழில்நுட்ப ரீதியாக இந்திய பிரதேசமாக இருக்கும் காஷ்மீரில் ஒரு அணை கட்ட 5.8 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் ஆட்சேபனைகளை மீறி சீனா பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்து வருகிறது.

இந்த திட்டம் டயமர்-பாஷா அணை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் சீன நிறுவனமான பவர் சீனா தலைமையிலான ஒரு கூட்டு நிறுவனம் இதனை கட்டி வருகிறது. இது ஒரு வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் கூட்டு முயற்சியாகும். இந்த திட்டம் இரு தரப்பினருக்கும் கிடைத்த வெற்றியாகும். சீனாவுக்கு அதிக ஒப்பந்தங்கள் இதன்மூலம் கிடைக்கின்றன, பாகிஸ்தான் இராணுவம் அதிக பணம் சம்பாதிக்கிறது.

உகான் வைரஸ் காரணமாக உலகெங்கிலும் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி (பிஆர்ஐ) பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் சீனா கிட்டத்தட்ட பாகிஸ்தானை மீண்டும் கையகப்படுத்தியதாக தெரிகிறது. இது சீனாவின் பிராந்திய போட்டியாளர்களுக்கு எதிரான  சீனாவின் தந்திர நோக்கத்திற்கு உதவுகிறது. இந்த அணை கட்டும் பணி இன்னும் 2 வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா நேரத்திலும், பாகிஸ்தான் மற்றும் சீனா இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.