"13.5 கோடி இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்!".. "இதுலயும் 12 கோடி பேரின் நிலை இதுதான்!".. 'வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிக்கை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் முடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும் இந்த நோய்த்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
![13.5 Crore Indians will lose Jobs after covid19 affected Economy 13.5 Crore Indians will lose Jobs after covid19 affected Economy](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/135-crore-indians-will-lose-jobs-after-covid19-affected-economy.jpg)
இதனால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு உண்டானதை அடுத்து, இந்தியாவில் மட்டும் 13.5 கோடி பேருக்கு வேலை பறி போகக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாக்கியுள்ள பொருளாதார சவால்களை சமாளித்தல்” என்கிற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 1 லட்சம் கோடி டாலர் வாய்ப்பை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சரி செய்ய 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார தொலைநோக்கு திட்டத்திற்கான, புரட்சிகர பொருளாதார அணுகுமுறை நமக்கு தேவைப்படுவதாகவும், இதனையெல்லாம் ஊக்குவிப்பு சலுகைகள், அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து அணுக வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது பிரதமர் மோடி அறிவித்துள்ள தற்சார்பு பொருளாதாரக் கொள்கையானது இதற்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளதாகவும், எனினும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தனிநபர் வருவாய் குறைந்து, 13.5 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும், இதில் 12 கோடி பேர் வறுமையில் சிக்குவார்கள் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதமும் இதனால் சரியும் என்பதால், நலிவுற்ற பிரிவினருக்கும், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு தரும் விதமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)