இந்தியாவில் 5 லட்சம் பேர் ‘இதுக்காக’ காத்திருக்காங்க.. எல்லாத்துக்கும் காரணம் ‘கொரோனா’.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் இந்தியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தினர். கொரோனா பாதிப்பு நிறைந்த 190 நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அனீல் பாங்கு என்பவர் தெரிவித்துள்ளார்.
அதில், 12 வாரங்களில் உலகம் முழுவதும் திட்டமிடப்பட்ட 2 கோடியே 84 லட்சம் அறுவை சிகிச்சை ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் நீடித்தால் கூடுதலாக 24 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்தாகும். இவ்வாறு ரத்தாகும் அறுவை சிகிச்சைகள் பெரும்பாலானவை புற்றுநோய் அல்லாத நோய் சம்பந்தப்பட்டவை. அதிகபட்சமாக எலும்பு நோய் தொடர்பான 63 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்தாகும்.
இதில் இந்தியாவில் 5,84,737 நோயாளிகள் தங்களது அறுவை சிகிச்சையை தள்ளிப்போடும் நிலையில் உள்ளனர். கொரோனா பரவும் நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் நோய் தாக்கும் ஆபத்து இருப்பதால், அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யவோ, தள்ளிப்போடவோ செய்யப்படுகின்றன. இதுபோல் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டால், நோயாளிகள் தங்கள் குறை தீர மேலும் காத்திருக்க வேண்டி இருக்கிறது. சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே ஆபத்து நேரிடுகிறது. இதனால் மருத்துவமனைகள் அவ்வப்போது நிலைமையை ஆராய்ந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.