'சீனாவுக்கு' எதிராக அணி சேரும் '7 நாடுகள்...' 'வர்த்தக ரீதியாக' தனிமைப்படுத்த 'முடிவு'... '7 நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் விவாதம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா விவகாரத்தில் சீனாவை தனிமைப்படுத்தும் நோக்குடன் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுடன் அமெரிக்கா முக்கிய விவாதம் நடத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய விவகாரத்தில் சீனா பல்வேறு உண்மைகளை மறைத்து விட்டதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சர்வதேச அரங்கில் சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சியாக சீனாவுடனான சர்வதேச வர்த்தக உறவுகளையும் மறு பரிசீலனை செய்து வருகிறது.
இந்தநிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் விவாதம் நடத்தினார்.
அப்போது சீனாவுக்கு மாற்றாக மற்ற நாடுகளில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை எப்படி கையாள்வது உள்ளிட்ட அம்சங்களும் ஆலோசனைக் கூட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. வர்த்தகத் தேவைகளுக்கு இனி சீனாவை நம்பி இருக்க வேண்டாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.