‘கிச்சன்ல இருந்து நேத்தே எடுத்து வச்சிட்டேன்’ ‘ஸ்கூல் பேக்கில் இருந்த 4 இன்ச் நீள கத்தி’.. மிரள வைத்த மாணவி..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Oct 03, 2019 02:09 PM
தன்னுடன் படிக்கும் மாணவன் வேறொரு மாணவியை விரும்பியதால் சக மாணவி ஒருவர் அவரைக் கொல்ல பள்ளிக்கு கத்தியுடன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் தீவில் கலைப் படைப்பாக்க பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்கு வரும் போது கத்தியுடன் வந்துள்ளார். அவரின் புத்தகப் பையில் இருந்த கத்தியை பார்த்த சக மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இது குறித்து ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அந்த மாணவியின் பையில் ஆசிரியர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது பைக்குள் 4 இன்ச் நீளமுள்ள 2 கத்திகள் இருந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடன் படிக்கும் சக மாணவன் வேறோரு மாணவியை விரும்பியதால், அவனைக் குத்துவதற்காக கத்தியை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதற்காக முந்தைய நாள் இரவே சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
