‘செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கிய பெண்’ ‘வெடித்து சிதறிய செல்போன் பேட்டரி’.. மிரள வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Sep 30, 2019 06:10 PM

செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கிய பெண், செல்போன் பேட்டரி வெடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 yr old kazakhstan girl has died after her charging phone exploded

கஜகஸ்தான் நாட்டில் உள்ள பாஸ்பேட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆல்வா அசெட்கிஸி அப்சல்பெக் (14) என்ற சிறுமி. இவர் நேற்று இரவு செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கியுள்ளார். காலை வெகுநேரமாகியும் சிறுமி எழுந்திருக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி இரவு தூங்க செல்லும் போது செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு தலைக்கு அருகில் வைத்து தூங்கியது தெரியவந்துள்ளது. செல்போன் அதிக நேரமாக ஜார்ஜில் இருந்ததால் பேட்டரி வெடித்து சிதறியுள்ளது. இதில் சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. போன் குறித்த விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KAZAKHSTAN #PHONEEXPLODES #GIRL #CHARGING