'தாய், மகள்கள் தற்கொலை‘... ‘அதிர்ச்சியளித்த வாக்குமூலத்தால்’... ‘நிகழ்ந்த திடீர் திருப்பம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 24, 2019 05:40 PM

தேனி அருகே 2 மகள்களுடன், தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது. 

twist in the case of 2 daughters mother committed suicide

போடி ஜே.கே.பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி லட்சுமி (36). இவர்களுக்கு அனுசுயா (17), ஐஸ்வர்யா (13), அக்ஷயா (8) என 3 மகள்கள் இருந்தனர். சென்னையில் அரிசி வியாபாரம் செய்து வந்ததில் நஷ்டம் ஏற்படவே, சொந்த ஊரான போடிக்கு திரும்பி வந்தனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் கணவர் இறந்துவிட, லட்சுமி மட்டும் தையல் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி, பள்ளியில் படித்து வந்த 3 மகள்களுடன், தாய் லட்சுமி டீயில் விஷம் கலந்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார்.

இதில், கடைசி மகளான அக்ஷாயாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், அவரை தவிர அனைவரும் உயிரிழந்தனர். குடும்ப வறுமையின் காரணமாக உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து, தனது தாய்மாமன் வீட்டுக்கு திரும்பிய அக்ஷாயா, தற்கொலைக்கு முன் நடந்த விஷயங்களை கூறியுள்ளார். அதில், தாய் லட்சுமியின் உறவினரான பாண்டியன் என்பவரின் மகன் முத்துச்சாமியை (28), மூத்த மகளான அனுசுயா காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் 5 பேரும் சேர்ந்து, தற்கொலைக்கு முதல் நாள் இரவு, வீட்டிற்கு வந்து, தாய் லட்சுமியை மிரட்டியதுடன், தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த லட்சுமி, மகள்களுடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய்மாமன் முருகன் அளித்த புகாரின் பேரில், சிறுமி அக்ஷயாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், 4 பேரை கைதுசெய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள அம்பிகா என்பவரை தேடி வருகின்றனர்.

Tags : #SUICIDE