‘அல்-பாக்தாதி மரணத்தை உறுதி செய்து’.. ‘புதிய தலைவரை நியமித்தது’.. ‘ஐஎஸ் தீவிரவாத அமைப்பு’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Nov 01, 2019 09:11 AM

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி மரணமடைந்ததை உறுதி செய்துள்ள அந்த அமைப்பு, புதிய தலைவரை நியமித்துள்ளது.

ISIS confirms death of leader al Baghdadi names new chief

சிரியா, இராக் போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த தீவிரவாதிகளே ஐஎஸ்ஐஎஸ் என அழைக்கப்படுபவர்கள். இராக்கையும், சிரியா மற்றும் துருக்கியின் ஒரு பகுதியையும் இணைத்து தனி முஸ்லிம் நாட்டை உருவாக்குவதே அவர்களது திட்டமாகும். மொசூல் நகரில் ஆட்சிபீடம் அமைத்து அவர்கள் தங்களுடைய அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என சுருக்கிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைக்க, அங்கு அதிரடியாக புகுந்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அமெரிக்க படை கொண்டு சென்ற நாய்களால் துரத்தப்பட்ட அல்-பாக்தாதி, வெளியேற வழி இல்லாத நிலையில் ஒரு குகைக்குள் புகுந்துள்ளார். பின் தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உடல் சிதறி பலியாகியுள்ளார்.

இறந்த அபுபக்கர் அல்-பாக்தாதியின் உடலை அமெரிக்க ராணுவத்தினர் கடலில் வீசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள வீடியோவில். “தலைவர் அல்-பாக்தாதிக்கு அஞ்சலி. புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹாஸ்மி அல் குரேஷி செயல்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #ISIS #SYRIA #IRAQ #ALBAGDADI #LEADER #DEAD #NEWLEADER