அன்னைக்கு 'டீ' குடிக்கல.. 'காபி' தான் குடிச்சேன்.. 'லெப்ட் ரைட்' வாங்கிய அனுஷ்கா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 31, 2019 11:32 PM
கோலியை காதலித்தபோது தொடங்கி தற்போது வரை அனுஷ்கா சர்மாவை பல்வேறு தருணங்களிலும் பலரும் கிண்டல் செய்து வந்துள்ளனர். குறிப்பாக கோலி ஒரு போட்டியில் ஒழுங்காக விளையாடாமல் போனால் அதற்கு அனுஷ்கா தான் காரணம் என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதுண்டு.

அந்தவகையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய தேர்வுக் குழுவினர் கேப்டன் விராட் கோலி மனைவிக்குத் தேநீர் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தனர் எனக் கடுமையான விமர்சனத்தை முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினியர் முன் வைத்தார். இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் தனது மவுனத்தை உடைத்து தன்மீதான விமர்சனங்களுக்கு அனுஷ்கா சர்மா பதிலளித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என்னைப்பற்றி வெளியாகும் செய்திகளுக்கு பெரும்பாலும் நான் மவுனத்தையே பதிலாக அளித்து வந்தேன். விராட்டை காதலித்தபோது சில பழிகள் வந்தன. திருமணத்துக்கு பின்னரும் அப்படித்தான் என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்மீது வைக்கப்பட்டன. தற்போது என்னுடைய பெயர் தவறாக சித்தரிக்கப்படுகிறது.
உலகக்கோப்பை போட்டியின் போது எனக்கு தேர்வாளர்கள் டீ கொடுத்தார்கள் எனப் புதிய கதை கட்டப்படுகிறது. நான் ஒரு போட்டியை மட்டுமே நேரில் வந்து பார்த்தேன். அந்த போட்டியையும் நான் தேர்வாளர்கள் அறையில் இருந்து பார்க்கவில்லை. வீரர்களின் குடும்பத்தினர் அமரும் இடத்தில் தான் அமர்ந்து பார்த்தேன்.உங்களுக்குத் தேர்வாளர்கள் குறித்து விமர்சிக்க வேண்டும் என்றால் தாராளமாகச் செய்யுங்கள்.
எதற்காக என்னுடைய பெயரை தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள். இந்த ஒரு செய்திக்காக நான் கோபப்படவில்லை. நிறைய செய்திகள் வந்ததுவிட்டன. அதுதான் நான் மெளனத்தைக் கலைக்க காரணம். அதனால் இன்று பேசவேண்டும் என முடிவெடுத்தேன். ஒருவரின் அமைதியை நீங்கள் பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கடைசியாக ஒன்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நான் காபி குடித்தேன்,'' என படு காரமாக விளக்கமளித்துள்ளார்.
