'இறந்த' உடலை தொடுவதாலோ, எரியூட்டுவதாலோ... 'கொரோனா' பரவுமா?... 'எய்ம்ஸ்' மருத்துவரின் புதிய 'விளக்கம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் பாதிக்கப்பட்ட இறந்தவர்களின் உடலைத் தொடுவதாலோ, எரியூட்டுவதாலோ கொரோனா பரவாது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் சந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதால் கொரோனா பரவ வாய்ப்பில்லை, இதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது, இறந்த சடலத்தின் மூலமாக கொரோனா பரவாது, எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல் மற்றும் சுவாசம் மூலமாகத் தான் இந்த நோய் பரவும் எனத் தெரிவித்த அவர், அனைவரும் தவறாமல் கைகளை கழுவவது மற்றும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலே கொரோனா பரவாமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
Tags : #CORONA #DELHI #AIMS #HOSPITAL #DEADBODY #NOT TRANSMITTED