'நெருங்கும் தூக்கு கயிறு'... 'தண்டனையை தள்ளி போட 'நிர்பயா குற்றவாளி' செய்த ட்விஸ்ட்'... அதிர்ந்த அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநிர்பயா வழக்கில் மரண தண்டனையைத் தள்ளிப் போடுவதற்காகக் குற்றவாளி வினய் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும், கடந்த 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் புதிய சட்டச் சிக்கல் உருவானது.
இது ஒருபுறம் நடக்கக் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பினார். ஆனால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதனை நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி தூக்கில் போடும்படி புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதற்கான வேலைகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் குற்றவாளி வினய் சர்மா கடந்த 16-ம் தேதி திகார் சிறைச்சாலையில் தன்னைத் தானே காயப்படுத்தி உள்ளார். அறையில் உள்ள சுவரில் தலையை வைத்து மோதியதில் வினய்க்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அனைத்து விதமான சட்ட வழிமுறைகளையும் மேற்கொண்டு அதில் தோல்வியடைந்த நிலையில், தூக்கில் போடுவதைத் தாமதப்படுத்துவதற்காக வினய் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.