'அட்சதை போட வேண்டிய 'அப்பா'வே நாசம் பண்ணிட்டாரே'... 'கதறிய காதலி'... காதலன் எடுத்த அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 01, 2020 12:30 PM

தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காதலியை, காதலன் கரம் பிடித்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ செய்துள்ளது.

42-year-old man allegedly raped his son\'s girlfriend, son married her

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் நித்யானந்தம். காய்கறி வியாபாரியான இவருக்கு 20 வயதில் மகன் உள்ளார். அவரும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒன்றாக படித்து வந்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள்.

இருவரும் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஊருக்கு வந்துள்ளார்கள். இந்நிலையில் மகனின் காதல் குறித்து அறிந்த நித்யானந்தம், இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு மகனுக்கு வேறு ஒரு பெண்ணையும் பார்க்க தொடங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் மகனின் காதலியை ரகசியமாக சந்தித்த நித்யானந்தம், தனது மகனுடன் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண், நித்யானந்துடன் காரில் சென்றுள்ளார். காரில் சென்ற அந்த பெண்ணை நித்யானந்தம் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணை ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண், வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில் மகனின் காதலியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தெரியவந்தது.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நித்யானந்தின் மனைவி உட்பட மூன்று பேரை கைது செய்தனர். தந்தையே உயிருக்கு உயிராக காதலித்து தனது காதலியை, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அவரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. இருப்பினும் தனது காதலியை கைவிட அவருக்கு விருப்பம் இல்லை. அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார். இதையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் ஊர்மக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் கிராம மக்கள் பலரையும் நெகிழச்செய்துள்ளது.

Tags : #RAPE #MARRIED #SON #FATHER