'அவங்க குடிச்சிருக்காங்க'..'நடுரோடு.. நள்ளிரவு நேரம்'.. கேப் டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Oct 03, 2019 12:33 PM
பெங்களூரில், அதிகாலை 3.30 மணிக்கு கேபில் இருந்து, ஆளில்லா ரோட்டில் இறங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதாக பெண் ஒருவர் கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.
கொழும்புவிற்கு ஒரு வேளையாக சென்று வந்த பெண் ஒருவர், பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்து 3.18 மணிக்கு இந்திரா நகரில் உள்ள தன் வீட்டுக்குச் செல்வதற்காக ஓலா கேப் ஒன்றை புக் பண்ணியிருந்ததாகவும், ஆனால் வந்த கேப் டிரைவர் மேப் காட்டும் திசையில் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி டிரைவரிடம் அப்பெண் கேட்டபோது , டிரைவர் அந்த வழியில் செல்லமுடியாது என்றும், மாற்றுப்பாதையில் செல்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் மனம் கேட்காத அந்த பெண், மேப் காட்டும் திசையில் செல்ல அறிவுறுத்தியும் கேப் டிரைவர் கேட்கவில்லை என தெரிகிறது.
ஆனால் இந்த பெண்ணுக்கோ, கொல்கத்தாவில், பெண் ஒருவர் இவ்வாறு கேப் டிரைவர் மாற்றுத்திசையில் அழைத்துச் சென்றதால் பாதிக்கப்பட்ட சம்பவம் நினைவுக்கு வரவே, எமர்ஜென்ஸியை ஆப்ஷனை அழுத்தியுள்ளார். அதன் பிறகு மேற்பார்வையாளரிடமிருந்து கேப் டிரைவருக்கு போன் வந்துள்ளது.
அப்போது அந்த கேப் டிரைவர் கன்னடத்தில் பேசியுள்ளார். அவர் பேசும்போது, இந்த பெண் குடித்துள்ளதாகவும் தன்னை மேப் பார்த்து சரியான திசையில் பயணிக்க விடாமல் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனே தன்னுடன் விமானத்தில் பெங்களூரு வந்து இறங்கிய நண்பர் ஒருவருக்கு போன் செய்து, தான் இருக்குமிடத்துக்கு வரச்சொல்லிவிட்டு, கேபில் இருந்து இறங்கிக் கொண்டார்.
பின்னர் அந்த பெண் சமூக வலைதளத்தில் இதுபற்றி புகார் பதிவிட்டதை அடுத்து, அந்த கேப் டிரைவர் பயணியின் பாதுகாப்பினை உறுதி செய்யாத காரணத்துக்காக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.