'கொன்னுட்ட தலைவா'... 'இப்படி ஒரு 'LOVE ப்ரோபோசலை' பாத்திருக்க முடியாது'... செம கியூட் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jan 10, 2020 03:49 PM
தான் காதலிக்கும் பெண்ணிடம் இப்படி கூட காதலை வெளிப்படுத்தலாமா என, பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இளைஞர் ஒருவர்.
தான் நேசிக்கும் பெண்ணிடம், எப்படியாவது தனது காதலை வெளிப்படுத்தி விட வேண்டாம் என்பது பலரது கனவு. காதலை சொல்லாமல் இருந்து விட்டு, பின்பு அதை நினைத்து வருந்துவது என்பது நிச்சயம் ஒரு ரணமான விஷயமாகும். காதலை சொல்வதற்கு சரியான நேரம் மற்றும் இடமும் கிடைத்து விட்டால், யார் தான் தனது அன்பை வெளிப்படுத்தாமல் இருக்க முடியும்.
ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்திய விதத்தை பார்த்தால், காதலில் விழாமல் இருப்பவர்கள் கூட காதலில் விழுந்து விடுவார்களோ என யோசிக்கும் விதத்தில், வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்துள்ளது.
சிறிய திரையரங்கு ஒன்று, அதில் பலரும் அமர்ந்து கார்ட்டூன் திரைப்படம் ஒன்று ஓடுவதை பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதில் முன்னிருக்கையில் டேவிட் என்ற இளைஞரும், ஸ்ருதி என்ற இளம்பெண் ஒருவரும் அமர்ந்து கொண்டு அந்த படத்தை பார்த்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அதில் கதாநாயகன், கதாநாயகிக்கு தனது அன்பை வெளிப்படுத்தும் தருணம் வருகிறது. தனது கையில் இருக்கும் மோதிரத்துடன் கதாநாயகியின் அருகில் கதாநாயன் செல்லும் போது, திடீரென அந்த மோதிரத்தை மேலே தூக்கி எறிகிறார்.
அந்த மோதிரம் படத்தை பார்த்து கொண்டிருந்த டேவிட்டின் கையில் வந்து விழுகிறது. உடனே தனது அருகில் அமர்ந்திருந்த, தான் நேசிக்கும் ஸ்ருதியிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் அந்த ஸ்ருதிக்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார். திரையரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்கிறார்கள்.
அப்போது தான் ஸ்ருதிக்கு புரிகிறது, அங்கு அமர்ந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் டேவிட்டின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று. மேலும் அந்த கார்ட்டூன் திரைப்படமும் டேவிட் தனது காதலை வெளிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படம் என்பது அப்போது தான் ஸ்ருதிக்கு புரிகிறது.
இதையடுத்து டேவிட் மோதிரத்தை நீட்டி, தனது காதலை ஏற்றுக்கொள்ள சம்மதமா என கேட்க்கிறார். அதிர்ச்சியில் ஆனந்த கண்ணீர் வந்து கொண்டிருந்த ஸ்ருதியும் டேவிட்டின் காதலை ஏற்று கொள்கிறார். உடனே மகிழ்ச்சி கலந்த அழுகையால் டேவிட்டை கட்டி அணைத்து கொள்கிறார். தனது காதலை வெளிப்படுத்த இளைஞர் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி பலரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.