‘காதலிக்க’ பெண் தேவை... ‘தேர்ந்தெடுக்கப்பட்டால்’ காத்திருக்கும் ‘ஜாக்பாட்!’... தொழிலதிபரின் ‘வைரல்’ விளம்பரம்...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Jan 13, 2020 07:37 PM
ஜப்பானிய தொழிலதிபர் ஒருவர் தன்னுடன் நிலவுக்குச் செல்ல ஒரு காதலி தேவை என விளம்பரம் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
![Japanese Billionaire Seeks Girlfriend To Fly With Him To Moon Japanese Billionaire Seeks Girlfriend To Fly With Him To Moon](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/japanese-billionaire-seeks-girlfriend-to-fly-with-him-to-moon.jpg)
ஜப்பானைச் சேர்ந்த சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி யூசகு மேசவா. கோடீஸ்வரரான யூசகு தன்னுடைய வித்தியாசமான முயற்சிகளால் பலரது கவனத்தையும் ஈர்த்து வருபவர். முன்னதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நிலவுக்கு ட்ரிப் செல்ல பல கோடிகளைக் கொடுத்து முன்பதிவு செய்து கவனிக்க வைத்தவர்.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பின் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். யூசகு மேசவா சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் இப்போது வரை விரும்பியபடி தான் வாழ்ந்து வருகிறேன். 44 வயதான எனக்கு தனியாக இருக்கும்போது வெறுமையான உணர்வுகள் வரத் தொடங்குகின்றன. என்னை நேசிக்க ஒரு பெண் தேவை.
நான் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலமாக நிலவுக்குச் செல்லும்போது என்னுடன் வர ஒரு காதலி தேவை. 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் நிலவுக்குப் பயணம் செய்யும் முதல் பெண்ணாக நீங்கள் ஏன் இருக்கக் கூடாது? இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 17, 2020. என்னோடு பயணிக்க விரும்புபவர்களில் இருந்து ஒருவரை நான் மார்ச் இறுதிக்குள் தேர்ந்தெடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)