'காத்துல பறந்த ரொனால்டோ!'.. 'வெறித்தனம்' காட்டிய 'வேறலெவல்' அடி.. இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Dec 19, 2019 05:02 PM
உலகப் புகழ் கால்பந்து வீரர் ரொனால்டோ அடித்த கோல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்தாலியில் நடைபெற்று வரும் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஜூவண்டசுக்கும் சாம்ட்டோரியாவுக்கும் இடையே நடந்த போட்டியில் ரொனால்டோ அடித்த வெறித்தனமான கோல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னை நோக்கி பறந்து வந்த பந்தினை, 4 அடிக்கும் மேலாக அடித்து, அதன் பின்னர் உந்தி, தலையால் தட்டி கோலாக மாற்றியுள்ளார் ரொனால்டோ.
இதனையடுத்து
Feel the magic in the air ❤️😍#Ronaldo pic.twitter.com/KIlHdbrDfL
— Mayank Sakhare (@MayankSakhare) December 19, 2019
காற்றில் பறக்கும் மனிதன் ரொனால்டோ என்று பட்டம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இப்படியான கோல்கள் எல்லாம் ரொனால்டோவால் மட்டுமே சாத்தியம் என்றும் அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இதுபற்றி பேசிய ரொனால்டோ, தனக்கு ஒரு மாதமாக முட்டி வலி இருந்ததாகவும், இப்போதுதான் பரவாயில்லாமல் இருப்பதாகவும், இது உண்மையில் ஒரு நல்ல கோல்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
