'கொரோனாவுக்கு' நம்பிக்கை தரும் புதிய 'சிகிச்சை முயற்சி...' 'களத்தில்' இறங்கும் 'ஃபிரான்ஸ்' விஞ்ஞானிகள்... 'எபோலா, சார்ஸ்' தாக்கத்தின் போது நல்ல 'பலன்' தந்தது...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 06, 2020 03:11 PM

ரத்ததிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்மா மாற்று சிகிச்சை மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியுமா? என்கிற ஆய்வுகளை விஞ்ஞானிகள் தொடங்க உள்ளனர்.

France to test plasma of coronavirus survivors to treat sick

உலகளவில் கொரோனா வைரசை வீழ்த்த தீவிரமான பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஃபிரான்ஸில் ரத்த பிளாஸ்மா மாற்று சிகிச்சை முறையில் கொரோனா தாக்குதலை முறியடிக்க முடியுமா? என்ற கோணத்தில் ஆய்வு தொடங்க உள்ளது.

இதன்படி ஏற்கெனவே கொரோனா தாக்கி குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு, கொரோனா தாக்கியவர்களின் ரத்தத்தில் செலுத்தப்படும்.

குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் கொரோனாவை எதிர்க்கும் திறன் கொண்ட எதிர் உயிரணுக்கள் வளர்ந்திருக்கும் என்பதால், அவை கொரோனா தாக்கப்பட்டவரின் உடலில் செலுத்தப்படும் போது, அங்குள்ள கொரோனா வைரஸ்களை தாக்கி அழிக்கும் என நம்பப்படுகிறது.

பாரிஸ் நகரில் உள்ள 60 கொரோனா நோயாளிகளை ரத்த மாற்று முறையில் குணப்படுத்தும் சோதனை முயற்சி நாளை முதல் தொடங்க உள்ளது. அதன் முடிவுகள் தெரிய 2 முதல் 3 வாரங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இது போன்ற சோதனைகள் ஏற்கனவே சீனாவிலும் அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் உலகை மிரட்டிய எபோலா, சார்ஸ் ஆகிய வைரஸ் தாக்குதல்களின் போதும் இந்த ரத்த மாற்று முறை சிகிச்சை நல்ல பலன் தந்தது. இந்த சிகிச்சை கொரோனாவுக்கும் பலன் தரும் பட்சத்தில் அது சர்வதேச அளவில் கொரோனாவை முறியடிப்பதில் மிகப்பெரிய திருப்புமுனையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.