"கூட்டமா எங்க போறீங்க?" ... பிரார்த்தனை செஞ்சு கொரோனாவ ஒழிக்க ... கும்பலாக கிளம்பிய கூட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் ராணி. அங்குள்ள பகுதி ஒன்றிலுள்ள பள்ளியில் தலைமையாசிரியாராக பணியாற்றி வரும் ராணி, ஜெபக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கணவர் போலீசாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை ஒழிக்க கூட்டு பிரார்த்தனை செய்வதற்காக டாடா ஏஸ் வண்டியில் படத்துக்கும் மேற்பட்ட ஆட்களை ஏற்றி பெரிய குறும்பாளையம் காலனிக்கு ராணி சென்றுள்ளார். சமூக விலகலை கடைபிடிக்காமல் டிரம்ஸ் மேளத்துடன் வண்டி வருவதைக் கண்ட காலனி மக்கள் உடனடியாக வண்டியை தடுத்து நிறுத்தி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது இப்படி கூட்டமாக செல்லலாமா என கேட்டுள்ளனர். வண்டியில் இருந்தவர்கள் பிரார்த்தனை செய்யப் போவதாக சொன்ன நிலையில் ராணி எந்த பதிலும் சொல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பகுதி மக்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். வண்டியில் வந்த அனைவரையும் போலீசார் பவானி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணைக்கு பின் ராணி மற்றும் வண்டியின் டிரைவரை கைது செய்தனர்.
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கும்பலாக மக்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு பிரார்த்தனை என்ற பெயரில் எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் இப்படி செயல்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
