அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து..! கார் ஓட்டுநர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 02, 2019 12:58 PM

அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் ஓட்டுநர் பரிதாபமாக பலியானார்.

Government bus and car accident in Puducherry

புதுச்சேரியில் இருந்து அரசு பேருந்து ஒன்று இன்று காலை கடலூரை நோக்கி சென்றுள்ளது. அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. கிருமாம்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அரசு பேருந்து மீது நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தில் இருந்தவர்கள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த கார் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்த கார் டிரைவர் தரங்கம்பாடியைச் சேர்ந்த பத்மநாபன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சாலையில் வைக்கப்பட்டு இருந்த தனியார் கார் நிறுவனத்தின் தடுப்பு கட்டையே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Tags : #BUS #CAR #ACCIDENT #PUDUCHERRY