புரட்டி எடுக்கும் "கொரோனாவால்"... 'குழந்தைகளுக்கு' காத்திருக்கும் புதிய 'ஆபத்து'... 'எச்சரித்து' அறிக்கை வெளியிட்ட 'ஐ.நா'!...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காரணமாக இன்று உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிப்பிற்குள் ஆகியுள்ளது. அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டி கடுமையான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. மேலும் பல நாடுகள் ஊரடங்கை கடைப்பிடித்தும் வருகிறது.

இந்நிலையில் ஐ.நா சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு தட்டம்மை, போலியோ ஆகியவற்றிற்கு எதிராக தடுப்பூசி போடுவதை இழுக்கிற ஆபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றுவதற்கு முன்பு கூட உலகளவில் சுமார் 2 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து போடுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. இதனையடுத்து இன்னும் சில மாதங்களுக்கு குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்க முடியாத சூழலால் தட்டம்மை, போலியோ உள்ளிட்டவை காரணமாக உலகளவில் குழந்தைகளுக்கு பேரழிவு ஏற்படும் அச்சம் உள்ளது' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனவால் உலக மக்கள் அதிகமாக வாடி வரும் நிலையில் ஐ.நா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
