COVID19: "பட்டினியாலும் பெரிய பாதிப்பு இருக்கு"... "அதுலயும் இந்த ஐந்து 'நாடுகள்'ல"... அதிர்ச்சி தரும் 'ரிப்போர்ட்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Apr 24, 2020 09:43 PM

கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் சுமார் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கையும் லட்சங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

After Corona Starvation is going to attack people

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினசரி கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை குடும்பத்தினர் அடிப்படை வாழ்வாதாரம் எதுவுமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பசியின் காரணமாக உலகம் முழுவதும் பெருந்தொற்று பரவல் போன்ற நிலை ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் உணவு தேவைக்காக அல்லல்படும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு இறுதியில் மோசமான பட்டினி சூழலில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடி இருந்த நிலையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 26 கோடி தொடும் அபாயமுள்ளது. கொரோனா பரவல் காரணமாக உலக அளவில் பட்டினியால் அதிகம் பாதிப்பு ஏற்படவுள்ள நிலையில் காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஏமன், வெனிசுவேலா, தெற்கு சூடான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளில் அதிகம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் அமைப்பு அறிவித்துள்ளது.

அதே வேளையில், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக நடுத்தர வருவாகியுள்ள நாடுகளும் பட்டினி மூலம் கடினமான நிலைக்கு தள்ளப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.