“முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு!”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி!'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 26, 2020 05:30 PM

சத்தியமங்கலம் அருகே முட்டைகோஸ் விளைவித்திருந்த விவசாயி ஒருவர் ஊரடங்கால், தான் விளைவித்த முட்டைகோஸ்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக, வருத்தத்துடன் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டிருந்தார்.

karnataka mp tejasvi surya buys cabbage after seeing farmers sad tweet

இந்த வீடியோவை பார்த்த கர்நாடக பாஜக எம்பி ஒருவர் முட்டைகோஸ் மொத்தத்தையும் கொள்முதல் செய்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. கெட்ட வாடியைச் சேர்ந்த கண்ணையன் என்பவர் ஒரு லட்சம் முட்டைகோஸ் அறுவடைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அவற்றை விற்பனை செய்வதில் ஊரடங்கு காரணத்தினால் சிக்கல் ஏற்பட்டதாகவும் வருத்தத்துடன் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த காட்சியை பார்த்த பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தமது தொகுதி மக்களுக்கு இலவசமாக முட்டைகோஸ்களை விநியோகிக்கும் யோசனையில், மொத்த முட்டை கோஸ்களையும் கொள்முதல் விலைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் நெகிழ்ந்த விவசாயி கண்ணையன் தேஜஸ்வி சூர்யாவுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.