'கொரோனாவுக்கு இந்த தடுப்பூசி’... ‘நல்ல பலன் தரும்’... ‘அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள்’... ‘வெளியிட்ட புதிய தகவல்’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பல நாடுகளும் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், காசநோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்து, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நல்ல பலனை அளிக்கும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1920-களில் கண்டறியப்பட்ட பிசிஜி (Bacille Calmette Guerin (BCG)) தடுப்பு மருந்து, புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கும், காசநோயால் (TB) பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும், நோய் தொற்று கிருமிகளுக்கு எதிராக திறம்பட செயல்படுவதும் கலிஃபோர்னியாவின் சாண்டியாகோவில் நடைப்பெற்ற மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிசிஜி தடுப்பு ஊசி மருந்து போடப்பட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறைந்து காணப்பட்டதும், மரணத்தை தடுக்கும் தன்மையை பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. உதாரணமாக, இந்தியா, சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் குழந்தைகளுக்கான பிசிஜி தடுப்பூசி இல்லாத அல்லது நிறுத்தப்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இறப்பு அதிகளவில் உள்ளது தெரியவந்துள்ளது.
இத்தகைய தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தவதன் மூலம் 1 வருடத்திற்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ளலாம் எனவும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கிரீஸ், ஜெர்மனி போன்ற நாடுகள், தங்களது மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கி முதற்கட்டமாக சோதிக்க முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
1950-களில் இருந்து சீனாவில் குழந்தைகளுககு பிசிஜி தடுப்பூசி போடப்பட்ட போதிலும், கொரோனா சீனாவில் ஏன் பரவியது என்று அந்த ஆய்வு பதிலளித்துள்ளது. ‘கலாச்சாரப் புரட்சியின்போது (1966-1976), காசநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை நிறுவனங்கள் கலைக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டன. இது கொரோனாவால் பாதிக்கப்படக்கூடிய மற்றும் பரவக்கூடிய சாத்தியமான நபர்களின் தொகுப்பை உருவாக்கியிருக்கலாம் என்று நாங்கள் ஊகிக்கிறோம்’ எனக் கூறியுள்ளது.
