உலக நாடுகளில் 'உண்மையான' உயிரிழப்பு எண்ணிக்கை... எவ்வளவு 'அதிகமாக' இருக்க 'வாய்ப்பு?'... அறிக்கை கூறும் 'புதிய' தகவல்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 23, 2020 02:02 PM

உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்க கூடும் என அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

Coronavirus Deaths Could Be Much Higher Than Known Reports

உலகம் முழுவதும் கொரோனாவால் அறிவிக்கப்பட்டதை விட பல்லாயிரக்கணக்கான அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்ககூடும் என நியூயார்க் டைம்ஸ் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன. அதில், இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தற்போதுள்ள எண்ணிக்கையை விட இரு மடங்காக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 75 சதவீத உயிரிழப்புகளைக் காட்டும் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் அதில் மேற்கோளிட்டு காட்டப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிக்கையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 17,000க்கும் அதிகமானதாகக் கருதப்பட்ட நாளில், ஏற்கெனவே 41,000 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 11 நாடுகளின் மொத்த இறப்பு புள்ளிவிவரங்களின் பகுப்பாய்வுபடி, கூறப்பட்டதைவிட கடந்த மாதத்தில் 25,000 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும், கடந்த மாதத்தில் முந்தைய ஆண்டுகளை விட இந்த நாடுகளில் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் கண்டறிந்துள்ளது. மொத்த உயிரிழப்பில் கொரோனா பாதிப்பு மற்றும் பிற காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அடங்கும்.

அதில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமாகிவிட்டதால் சிகிச்சையளிக்க முடியாத நபர்களும் அடங்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் மருத்துவமனைகளில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மட்டுமே தெரிவிக்கும் வேளையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை கொரோனாவின் முழுமையான பாதிப்பை உணர்த்துகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.