'குறையாத' பாதிப்பால் ஊரடங்கு 'நீட்டிப்பு'... ஆனால் 'குழந்தைகளுக்கு' மட்டும் 'விதிவிலக்கு' அளித்த நாடு... என்ன 'காரணம்?'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 22, 2020 05:23 PM

ஸ்பெயினில் குழந்தைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து தினமும் சிறிது மணிநேரம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Coronavirus Lockdown Spain To Let Children Take Walks

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் வரும் 26ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் குறையாததால் மே   மாதம் 9ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பாதிப்புகள் சற்று குறைந்து வருவதால் குழந்தைகள் மன நல நிபுணர்கள், பிரபல கால்பந்து வீரர்கள், நகர மேயர்கள் எனப் பலரது  சார்பிலும் ஸ்பெயின் அரசுக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் 55 ஆயிரம் பேரிடமிருந்து பிரதமருக்கு மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.

அதில், "ஸ்பெயினிலுள்ள நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள்தான் அதிகம் உள்ள நிலையில் பெரும்பாலான வீடுகளில் பால்கனி கூட கிடையாது. இதன்காரணமாக ஊரடங்கின்போது வீடுகளில் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் சிரமாக உள்ளது. அவர்கள் முரட்டு சுபாவம் உள்ளவர்களாக மாறி வருவதால் அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. அதனால்  குழந்தைகளுக்கு ஊரடங்கிலிருந்து தினமும் சிறிதுநேரம் விதிவிலக்கு அளிக்கவேண்டும்" எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அந்நாட்டின் பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் 27ஆம் தேதி முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தினமும் பெற்றோர் சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அப்போது 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும்  பெற்றோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அத்துடன் நடந்து செல்லும்போது குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே 2 மீட்டர் சமூக இடைவெளி இருக்க வேண்டும். குழந்தைகளை நீண்ட தொலைவுக்கு அழைத்து செல்லாமல் தங்களுடைய தெருவுக்கு உள்ளேயே அழைத்து செல்ல வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.