போனில் கேட்ட 'சோக' செய்தியால்... காருடன் 'கடலுக்குள்' பாய்ந்த பெண்... கடைசில என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா காரணமாக துபாயில் மூடப்பட்ட கடற்கரைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல கடற்கரைகளில் ஒன்றான அல் மம்சார் கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. இங்கு அமீரகத்தில் வசிக்கும் 41 வயது பெண் சமீபத்தில் சென்றுள்ளார்.

காரை அங்குள்ள கடற்கரை முகப்பில் நிறுத்த சென்றவருக்கு மொபைல் அழைப்பு வந்துள்ளது. பேசியவாறே காரை ஓட்டியவர் எதிர்முனையில் கேட்ட சோகமான தகவலால் கவனம் சிதறி பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து விட்டார். இதையடுத்து அப்பெண்ணின் கார் கடலுக்குள் பாய்ந்தது.
இதைப்பார்த்த அப்பெண் காருக்குள் இருந்து வெளியே வந்து உதவி தண்ணீரில் மிதந்து கொண்டே உதவி கேட்டார். இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்களுடன் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கடலுக்குள் சென்று, அந்த பெண்ணை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.
கடலுக்குள் மிதந்த காரையும் கிரேன் மூலம் தூக்கி வெளியில் கொண்டு வந்தனர். மேலும் கடற்கரை அருகே செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மற்ற செய்திகள்
