“ஆம்பளன்னா சுடுங்க பாப்போம்!”.. 'போலீசுக்கும் டாக்டருக்கும்' நடந்த வாக்குவாதம்!.. சோதனைச்சாவடியில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'.. 'வீடியோ'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்ட எல்லைப் பகுதியான ஆண்டிபட்டி அருகே அரளியூத்து என்கிற இடத்தில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து, சென்னையில் இருந்து வருபவர்களை நிறுத்தி, அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மண்டலம் விட்டு மண்டலம் வருபவர்கள் ஈபாஸ் இருந்தால் மட்டுமே தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படும் நிலையில், கொரோனா அதிவேகமாக பரவிவரும் சென்னையிலிருந்து, அவ்வழியே வருபவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என உறுதிப்படுத்தக்கூடிய ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டு, அதில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் தேனியிலிருந்து திருமங்கலத்திற்கு வேகமாக சென்ற காரை அரளியூத்து சோதனைச்சாவடியில் போலீசார் காரை சைகைகாட்டி நிறுத்தினார்கள். ஆனால் சைகைகாட்டி நிறுத்தக்கூறிய போலீசாரை இடித்துத்தள்ளுவதுபோல் சென்ற அந்த காரை போலீசார் மடக்கி பிடித்ததில், காரில் இருந்தது, மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசுமருத்துவர் சாலமன்ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் என்பது தெரியவந்தது.
ஆனால் மருத்துவர் சாலமன்ராஜா, கோபத்துடன் சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் கூறிய விளக்கத்தை கேட்க மறுத்த அவர், கோபத்தின் உச்சிக்கே சென்றதுடன், போலீஸார் தன்னைத் திட்டியதாகக் குறிப்பிட்டு பதிலுக்கு அவர்களை ஆபாசமாக திட்டி ஒருகட்டத்தில் போலீசாரை தாக்கவும் முயற்சித்தார். பின்னர் மருத்துவர் சாலமன்ராஜாவுடன் வந்த அவரது குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்றனர். இதனால் அரளியூத்து சோதனைச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் காரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
