‘தனியா அழுதுகொண்டிருந்த இளைஞர்’.. விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்.. சென்னையில் நண்பர்களால் நடந்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இளைஞரை கத்தியால் தாக்கி அவரது நண்பர்களே தங்க நகை, இருசக்கர வாகனத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராய நகர் அருகே சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுனில் (20). இவர் கடந்த 10ம் தேதி இரவு தனது நண்பர்களான சத்யா மற்றும் செந்திலுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது சுனிலை கத்தியால் தாக்கி, அவர் அணிந்திருந்த தங்க செயின், பைக் மற்று செல்போன் உள்ளிட்டவற்றை சத்யா மற்றும் செந்தில் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். இதில் தலை, காது உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த சுனில் அப்பகுதியில் அழுதுகொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் சுனிலை மீட்டு மருத்துவமனையில் அனுமத்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இளைஞரை அவரது நண்பர்களே கத்தியால் தாக்கி தங்க நகை, பைக் மற்றும் செல்போனை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
