'கடைசியாக' முகத்தை பார்க்க... கண்ணீருடன் 'வெள்ளை' உடையில் வந்த ரியா... 'விசாரணை' வளையத்திற்குள் கொண்டு வந்த போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14-ம் தேதி மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய திறமையால் மிகவும் குறுகிய காலத்தில் பாலிவுட் உலகில் இடம்பிடித்த சுஷாந்தின் மரணம் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நடிகர்-நடிகைகள் உட்பட அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான சுஷாந்தின் மரணத்தை யாராலும் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. மறுபுறம் அவரது உறவினர்கள் சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். ரேகா, சுஷாந்தின் காதலி என்று எங்கும் கூறவில்லை. ஆனால் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் இருவரும் காதலிப்பதாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.
அவர் என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கண்டறிய அவருடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரிடமும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றனர். முன்னதாக சுஷாந்தின் உடல் மும்பையில் உள்ள காப்பர் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது.
கடைசியாக அவரது முகத்தை பார்க்க ரியா சக்ரபோர்த்தி நேற்று மருத்துவமனைக்கு சென்றார். வெள்ளை உடையில் முகத்தை மூடிக்கொண்டு வந்த ரியா கண்ணீருடன் காரில் ஏறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
