'என்னது பேய்களும் ஒர்கவுட் பண்ணுதா'?... 'எப்படி சாத்தியம்'... 'மண்டையை பிய்த்து கொண்ட நெட்டிசன்கள்' ... பீதியை கிளப்பும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 13, 2020 03:59 PM

தானாகவே இயங்கிய உடற்பயிற்சி இயந்திரம் குறித்த வீடியோ வைரலான நிலையில், அதற்கான காரணம் தற்போது  தெரியவந்துள்ளது.

Gym equipment moves on its own, Video going viral on all social media

அமானுஷ்ய கதைகள் குறித்துப் பேசுவது பலருக்கும் பிடித்த ஒன்று. அது பயமாக இருந்தாலும் அதிலிருக்கும் சுவாரசியம் காரணமாகப் பலரும் அதுகுறித்து பேசுவார்கள். அதிலும் இரவு இந்த கதைகளைப் பேசுவது என்பது இன்னும் சுவாரசியமான ஒன்று. இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தில் தானாகவே இயங்கிய உடற்பயிற்சி இயந்திரம், நெட்டிசங்களை பீதி அடையச் செய்த நிலையில், அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி பகுதியின் திறந்தவெளியில் உடற்பயிற்சி மையம் ஒன்று உள்ளது. அங்குள்ள ஒரு உடற்பயிற்சி செய்யும் இயந்திரம் தானாகவே இயங்கிக் கொண்டு இருந்தது. ஒருவர் அமர்ந்து உடற்பயிற்சி செய்தால் அது எப்படி இயங்குமோ, அதுபோன்று அந்த இயந்திரம் முழு பலத்துடன் இயங்கியது. இதைப் பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது வைரலாகியது. அந்த வீடியோவை பார்த்த பலரும் அமானுஷ்ய கதைகளைச்  சொல்ல ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் இந்த தகவல் ஜான்சி நகர போலீசார் கவனத்துக்குச் செல்ல, அவர்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் இயந்திரத்தில் அதிகப்படியான கிரீஸ் இருந்து அதன் வெளியேற்றம் காரணமாக இயந்திரம் தானாகவே இயங்கியதாகத் தெரிவித்துள்ளனர். மற்றபடி, அந்த இயந்திரத்தில் எந்த அமானுஷ்யமும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளனர். இருப்பினும் அந்த வீடியோ சிலருக்குக் கிலி ஏற்படுத்தினாலும் ஆச்சரியம் இல்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gym equipment moves on its own, Video going viral on all social media | India News.