சுஷாந்த் சிங்குக்கு' நிதிப் பிரச்னை இருந்ததா?... 'வீட்டின்' மாத வாடகை 'ரூ. 4.51 லட்சம்...' 'புதிய கோணத்தில்' விசாரிக்கும் 'போலீசார்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jun 15, 2020 11:56 AM

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு நிதி பிரச்சனை இருந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Police investigate whether Sushant Singh was in financial trouble

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. ஆனால், சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலையில் ஏதோ சதி இருப்பதாக அவரின் மாமா தற்போது தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் பந்த்ரா பகுதியில் டூப்ளெக்ஸ் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அந்த வீட்டின் மாத வாடகை மட்டுமே ரூ. 4 லட்சத்து 51 ஆயிரம் ஆகும். அதனால் சுஷாந்த் நிதி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் முன்னணி நடிகரான அவருக்கு நிதி பிரச்சனை இருக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங்கிற்கு பண பிரச்சனையால் மன அழுத்தம் ஏற்படவில்லை என்று அவரின் அக்கா தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கு பண பிரச்சனை இருந்ததா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சுஷாந்த் கடைசியாக தன் அம்மாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். சுஷாந்த் பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தியை காதலித்து வந்தார். எல்லாம் நன்றாக நடந்த போது சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன அழுத்தம் ஏற்பட என்ன காரணம் என்று கேள்வி எழுந்துள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புட் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை அங்கிதா லோகந்தேவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரிடம் சுஷாந்த் சிங்கின் மரண செய்தியை தெரிவிக்க அதிர்ச்சி அடைந்திருக்கிறார். சுஷாந்த் சிங் இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தபோது அங்கிதாவை காதலித்தார்.

சுஷாந்த் சிங் வீடு 7வது மாடியில் இருந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்ட சமயம் அங்கே 3 பேர் இருந்துள்ளனர். வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் இருவர், ஒரு ஆர்ட் டிசைனர் இருந்தார். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் இல்லை.

அவர் காலையிலிருந்து படுக்கையில் இருந்து எழுந்திரிக்கவே இல்லை என்று கூறுகிறார்கள். அது பொய்யான தகவல். அவர் படுக்கையைவிட்டு எழுந்துள்ளார் . அதிகாலை அவர் எழுந்து வீட்டில் சில நிமிடங்கள் டிவி பார்த்தவர் பின் ஜூஸ் குடித்து இருக்கிறார். வேலை காரர்களிடம் ஜூஸ் வேண்டும் என்று கேட்டு வாங்கி குடித்துள்ளார்.

அதன்பின் காலை 10 மணிக்கு தூங்க செல்கிறேன் என்று கூறிவிட்டு தூங்க சென்றுள்ளார். 1.30 மணிக்கு அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பின்பே அவரின் நண்பர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 - 12 மணிக்குள் அவர் தற்கொலை செய்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனிடையே அவர் தனது சகோதரி மற்றும் நண்பனுடன் செல்ஃபோனில் பேசியதாகக் கூறப்படுகிறது. அறையில் இதுவரை சந்தேகத்திற்கு இடமாக எதுவும் கிடைக்கவில்லை, என்று மும்பை போலீஸ் கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் அறையில் அவர் எழுதிய தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் சாகும் முன் அதை பற்றி யாரிடமும் பேசவும் இல்லை. தன்னுடைய மரணம் குறித்த காரணம் யாருக்கும் தெரிய கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Police investigate whether Sushant Singh was in financial trouble | India News.