‘நம்மள அந்த பையன் பாத்துட்டான்’.. ‘வீட்டுல சொல்லிட்டா அவ்ளோதான்’.. பகீர் கிளப்பிய சம்பவம்.. சிக்கிய ‘காதல்ஜோடி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 13, 2020 10:52 AM

திருப்பூர் அருகே சிறுவன் கொலை செய்யப்பட்ட பின்னணியில் காதல் ஜோடி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tiruppur 8 year old boy brutally killed, Police suspect love couple

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சொட்டகவுண்டம்பாளையம் சேர்ந்தவர்கள் தங்கராஜ்-சுமதி தம்பதி. இருவரும் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல தம்பதியினர் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது இவர்களது இரு மகன்களும் அப்பகுதி சிறுவர்களுடன் குளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். மதியம் வரை விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த தம்பதியினரின் இளைய மகன் பவனேஷ் (8) மட்டும் மாயமாகியுள்ளார். வேலை முடிந்து வந்த தங்கராஜ் மகனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை பல்லகவுண்டன்பாளையம் குளத்துக்கு அருகே உள்ள புதரில் சிறுவன் பவனேஷ் சடலமாக கிடந்துள்ளான். இதை அங்கு ஆடு மேய்க்க சென்ற ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சிறுவன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனின் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் கொடூரமாக குத்தப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இறந்த சிறுவனை, பதின் பருவ பள்ளி சிறுமி ஒருவர் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

சம்பத்தன்று கல்லூரி மாணவர் ஒருவர், அந்த பள்ளி சிறுமியை அப்பகுதிக்கு அழைத்து வந்து காதல் செய்து வந்துள்ளார். இதை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பவனேஷ் பார்த்துவிட்டதாகவும், இதை சிறுவன் தனது வீட்டில் சொல்லிவிடுவான் என்றும் காதலனிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்ற காதலன் காட்டுப்பகுதியில் வைத்து கத்தியால் கொடூரமாக குத்திக்கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tiruppur 8 year old boy brutally killed, Police suspect love couple | Tamil Nadu News.