‘சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனாவின் கொடூரம்!’.. ‘தேவையில்லனா பயணங்களை கட் பண்ணுங்க!’ .. ‘இந்திய அரசு வேண்டுகோள்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாசிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகியுள்ளதால், அவசியமற்ற பயணங்களை தவிர்க்கச் சொல்லி இந்திய அரசு இந்தியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா எனும் கொடூர வைரஸால் இதுவரை 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமல்லாது ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், பிரான்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் கொரோனா தீவிரமாக பரவியதால், அந்நாடுகளும் கொரோனாவை எதிர்த்து போராடி வருகின்றன.
இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகமானதை அடுத்து, அவசியமற்ற சிங்கப்பூர் பயணங்களை இந்தியர்கள் தவிர்க்குமாறு டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் இந்திய அரசு சார்பில் பல்வேறு துறை அமைச்சர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதன்படி, தற்போது சீனா, ஹாங்காங், தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூரில் இருந்து வரும் இந்தியர்கள் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், இனி காத்மாண்டு, இந்தோனேஷியா, வியட்நாம், மலேசியாவில் இருந்து வரும் இந்திய பயணிகளிடமும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிகிறது.