‘வுஹான் மருத்துவமனை இயக்குநருக்கே இந்த நிலையா?’.. ‘கொரோனா வைரஸுக்கு பலி ஆன சோகம்’.. கதறி அழும் சீன மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் வுஹான் மாகாணத்தில் 50 நாட்களுக்கு முன் உருவான கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 72 ஆயிரம் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுள் 11,741 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 1,900 பேர் இறந்துள்ளதாகவும், 7,900 பேர் மட்டுமே சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால் சீனாவை விட்டு பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல, மீதமிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த சீன மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையின் சீன மக்களின் நம்பிக்கை எனும் அஸ்திவாரத்தை ஆட்டம் காட்ட வைத்திருக்கிறது, சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருகும் வூசாங் மருத்துவமனையின் 34 வயதான இயக்குநர் லியூ ஷிமிங் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம். இவர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளார் எனும் செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மருத்துவர்களே இந்த வைரஸால் இறக்க நேர்ந்தால், அடுத்தடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதை கைவிட்டுவிட்டு வெளியேறத் தொடங்கிவிடுவார்கள் என்றும், சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர்கள் சிகிச்சையைக் கைவிட்டால், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவராக இறக்க வேண்டி வரும் என்பதை நினைத்து பார்க்கவே அச்சமாக இருப்பதாக சீன மக்கள் கதறியபடி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.