‘கொரோனாவுக்கு எதிரான மருந்து’.. ‘கொண்டு போகும் வழியில் உயிரிழந்த பெண்’.. உட்பட ‘இவங்க 3 பேரும் செங்கொடியை ஏந்தியவர்கள்!’
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்துக்கு எதிராக முன்னின்று போராடி மறைந்த 3 சீனப் பெண்களுக்கு செங்கொடியை ஏந்தியவர்கள் (Bearer of Red flag) என்கிற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் முன்நின்று 18 நாள்கள் பணிபுரிந்து போராடி உயிர்நீத்த இந்த பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட இவ்விருது குறித்த அறிவிப்பை சீனாவின் அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இவ்விருது சீனாவின் நான்ஜிங் மருத்துவமனையின் துணைத் தலைமை மருத்துவர் சூ ஹூய், தனது கிராமமான யுன்வூ பகுதியில் வீடுவீடாகச் சென்று கொரோனா தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய குய்சூ மாகாணத்தின் உள்ளூர் அதிகாரியான ஹுவான் ஹியான், கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து கொண்டு செல்லும் உயிரிழந்த வடகிழக்குச் சீனாவின் குயாங்ஹாவ் நகரத்தின் பெண்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஜியாங் நா உள்ளிட்ட 3 பேருக்குமாக இவ்விருது வழங்கப்பட்டு, இவர்களின் தியாகத்தை சீனா கௌரவப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
