குழந்தையிடம் தோற்றுப் போன 'கொரோனா'... 'குட்டிப்பாப்பா' போட்ட 'சுட்டி' நடனம்... 'இணையத்தை' கலக்கும் 'வைரல் வீடியோ'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை 16 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பும் போது, ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 'பாய்.. பாய்...' நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 100 தாண்டியுள்ளது. கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இதில் 11,864 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சீன சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 16,155 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி, 16 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார்.வீடு திரும்பும் முன்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறுமி ஆடிய சுட்டி நடனம் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Thank you! Let me dance for you! Bei Bei, a 5-year-old #COVID19 patient, was discharged from a hospital in Shiyan, Hubei, on Mon. This was her way to say thank you. pic.twitter.com/DntHRsb4EM
— People's Daily, China (@PDChina) February 19, 2020
