VIDEO: 'அழுகாதீங்க செல்லங்களா!... 'கொரோனா'வ அடிச்சு பறக்கவிட்றலாம்'... மழலையாக மாறிய சீன மருத்துவர்கள்!... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 21, 2020 10:41 AM

கொரோனா பாதித்தக் குழந்தைகளைக் காக்க, மழலையாக மாறி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

chinese doctors treat corona affected kids by drawing cartoons

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீனா மட்டுமில்லாமல் உலக நாடுகள் மத்தியிலும் அனுதாப அலை வீசி வருகிறது. தற்போது வரை 2,007 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 75, 138 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் அளிக்க சீன மருத்துவர்கள் தங்கள் உடைகளில் கார்ட்டூன் வரைந்து சிகிச்சை அளிக்கின்றனர்.

இந்த வீடியோவை சீன ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதில், மருத்துவரக்ள் தாங்கள் அணிந்துள்ள வெள்ளை உடைகளில் மார்கர் வைத்து கார்ட்டூன் பொம்மைகளை வரைந்து கொண்டு பணிக்கு செல்லும் இந்த வீடியோ காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

Tags : #CHINA #CORONA #DOCTORS #KIDS