சும்மா சும்மா என்ன 'தொந்தரவு' பண்ணாதீங்க... அதெல்லாம் 'என்னால' செய்ய முடியாது!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையிலுள்ள ஊழியர்களின் இருக்கை நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், ரோஸ் கார்டனில் நடந்த பாத்திரகையாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணியாமல் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்.
'நான் அனைவரிடத்தில் இருந்து விலகியே இருக்கிறேன். அதனால் நான் முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லை. அதே போல வெள்ளை மாளிகையில் கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளது' என தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளை மாளிகையில் கொரோனா மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மிக சாதாரணமாக பேசியுள்ளார்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் முகக்கவசம் அணியாமல் இருப்பது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், வெள்ளை மாளிகையில் என்னை சந்திக்கும் நபர்கள் நான் முகக்கவசம் அணிந்து அவர்களை சந்திப்பதை விரும்பவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.