நடுக்கடலில் 'அமெரிக்க' போர்க்கப்பலை... அடித்து 'விரட்டிய' சீனா... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனாவை விட பல்வேறு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவை புரட்டி போட்டுள்ளது. சீனா வேண்டுமென்றே தான் வைரஸை பரப்பி எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைத்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவின் மீது அடுக்கினார்.

இந்நிலையில் தென் சீன கடல் பகுதியில் உள்ள பேரசல் தீவுப்பகுதியில், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்., பேர்ரி ரக போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது. இந்த பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, தனது கடற்படை கப்பல்கள் மற்றும் போர் விமானம் கொண்டு அந்த அமெரிக்க கப்பலை விரட்டியடித்துள்ளது. இதுகுறித்து சீன ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் போர்க்கப்பல் நுழைந்தது எங்களை கோபமடைய செய்தது. எங்களது அமைதியை சீர்குலைக்க முயற்சிகளை மேற்கொள்ளாமல் கொரோனா வைரசில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்' என தெரிவித்தார்.
சீனாவின் தாக்குதல் குறித்து அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சர்வதேச சட்டத்திலுள்ள கடலின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வலியுறுத்த அமெரிக்க முயன்றது. தென் சீனக் கடலில் சட்டவிரோதமான மற்றும் கடல்சார் கூற்றுகள் சுதந்திரத்திற்கு முன்னோடி இல்லாத வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
